உசிலம்பட்டி அருகே போலிசார் விசாரணைக்கு அழைத்ததால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோடநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் வேங்கை வீரணண் மகன் நிலமாலை (26). கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார்.இவர் வீட்டின் அருகில் வசிப்பவர் ராமு.இவர் மதுரையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.ராமு தண்னுடைய வீட்டில் கண்காணிப்புக் கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்..வீட்டின் பின்பகுதயில் தோட்டம் இருப்பதால் பெண்கள் அதிகாலையில் இயற்கை உபாதைக்கு ஒதுங்குவர். இப்பகுதியில் கேமரா மாட்ட வேண்டுமா என நிலமாலை ராமுவிடம் கேட்டுள்ளார்.இதில் இருதரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் போலிஸ் ராமு நிலமாலை மீது எழுமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.நேற்று (26.09.19) போலிசார் விசாரணைக்கு அழைத்த நிலையில் ராமு குடும்பத்தினர் எழுமலை காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளனர்.ஆனால் புகார் அளித்த ராமு வராததால் மாலை வரை போலிசார் விசாரணைக்கு அழைக்கவில்லை.
மாலை வரை காவல்நிலையத்தில் காத்துக்கிடந்த மனவருத்தத்தில் இருந்த நிலமாலை எழுமலையில் மருந்தைக் குடித்து இறந்ததாகக் கூறப்படுகிறது.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலிசார் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு திரண்ட உறவினர்கள் நிலமாலை சாவுக்கு காரணமான போலிஸ் ராமுவை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.சம்பவமறிந்த உசிலம்பட்டி போலிசார் ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மறியலை கைவிடச் செய்தனர்.




You must be logged in to post a comment.