18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலையில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வந்த 17 ஆவது தேசிய ஜூனியர் தடகள போட்டி தற்பொழுது நிறைவுபெற்றது.

திருவண்ணாமலையில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வந்த 17 ஆவது தேசிய ஜூனியர் தடகள போட்டி தற்பொழுது நிறைவுபெற்றது.

எழுதியவர்: mohan September 27, 2019, 2:31 pm

திருவண்ணாமலையில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வந்த 17 ஆவது தேசிய ஜூனியர் தடகள போட்டி தற்பொழுது நிறைவுபெற்றது. 25 மாநிலங்கள் பங்கேற்ற இந்த தேசிய தடகளப் போட்டியில் 159 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த  சாம்பியன் பட்டத்தையும் பெற்று முதலிடத்தில் தமிழக அணி உள்ளது. ஹரியானா மாநிலம் 146 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை 82 புள்ளிகள் பெற்று ஹரியானா மாநிலம் முதலிடத்தையும், 75 புள்ளிகளைப் பெற்று தமிழ்நாடு அணி இரண்டாவது இடத்திலும்  உள்ளது.

பெண்கள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை 84 புள்ளிகள் பெற்று தமிழக அணி முதலிடத்தையும், 66 புள்ளிகள் பெற்று கர்நாடகா  மாநிலம் அணி இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த தேசிய தடகளப் போட்டியில் தமிழ்நாடு 9 தங்கப் பதக்கத்தையும், 8 வெள்ளிப் பதக்கத்தையும், 5 வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!