மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் பழங்காநத்தம் அருகே கடந்த 18ஆம் தேதி காலை 11 30 மணி அளவில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் ஞானபிரகாஷ் குழந்தை (பிறந்து 45 நாள் ஆன கவிஸ்வரன்) படுகாயமடைந்து முதுகு விலா எலும்பு நொறுங்கியது. அப்பொழுது அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில் நேற்று 26.09.19 சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை மரணம் அடைந்தது. இதுகுறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.