தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் ADSP சுருளிராஜன் ஆகியோர்கள் தேனி மாவட்டத்தில் இயங்கக்கூடிய தனியார் பேருந்து உரிமையாளர்களை நேரில் அழைத்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பேருந்துகளை அதிக வேகத்தில் இயக்கக் கூடாது, அனுபவமில்லாத ஓட்டுனர்களை பேருந்து ஓட்டுனர்களாக நியமிக்க கூடாது, பேருந்துகளில் CCTV கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து விபத்துக்களை தவிர்த்து விபத்தில்லா தேனி மாவட்டமாக மாற்றக்கோரி நிகழ்ச்சி நடந்தது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வி காளமேகம்




You must be logged in to post a comment.