17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பூட்டை உடைத்து திருடிய 2 போ் கைது

பூட்டை உடைத்து திருடிய 2 போ் கைது

எழுதியவர்: mohan September 27, 2019, 11:20 am

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சைதாப்பேட்டை பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளனர்.இருவரையும் பிடித்து விசாரணை செய்தபோது வேலூர் அடுத்த சத்துவாச்சாரி கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சத்யா என்ற சத்யராஜ் மற்றும் வேலூர் முத்து மண்டபம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பதும், இவர்கள் ஏற்கனவே ஆரணியில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறை சிறை சென்றவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இருவரையும் தீவிர விசாரனை செய்தபோது ஆரணி டவுன் ஷராப்பஜார் மற்றும் சைதாபேட்டை பகுதியில் 8 சவரன் வழிபறியில் ஈடுபட்டதையும், மேலும் ஆரணியைச் சுற்றியுள்ள காட்டுக்காநல்லூர், குண்ணத்தூர், கஸ்தம்பாடி மற்றும் போளூர் அடுத்த மங்கலம் ஆகிய பகுதிகளில் பூட்டை உடைத்து 10 சவரன் தங்கநகைகளை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.மேலும் இருவரிடம் இருந்தும் 18 சவரன் தங்கநகைகள், மற்றும் இரண்டு இரண்டு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து ஆரணி நகர காவல் நிலைய போலிசார் நடவடிக்கை மேற்க்கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!