திருவண்ணாமலை சண்முகா கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. விழாவில் கல்வியில் தொழில் நுட்பம் –- சவால்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடந்தது. இப்போட்டியில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 4மாவட்டங்களை சேர்ந்த 270 ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டு கட்டுரை எழுதினர்.இதில் கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மீனா முதலிடத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு முதன்மை கல்வி அலுவலர் நடராஜன் 1 சவரன் தங்க நாணயம் பரிசு வழங்கி, தலைமையாசிரியை மீனா ஏற்கெனவே நல்லாசிரியர் விருது பெற்றவர். மேலும், பள்ளியில் மாணவர்கள் ஆட்டோவில் வந்து செல்ல கடந்த 3வருடங்களாக மற்ற ஆசிரியர்களுடன் இணைந்து சொந்த செலவில் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது என கூறி பாராட்டினார்.நான்கு மாவட்டங்களில் முதல் பரிசு பெற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த தலைமையாசிரியை மீனாவை கல்வியாளர்கள், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற கொளத்தூர் தலைமை ஆசிாியருக்கு 1 சவரன் தங்க நாணயம் பரிசு. முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார்
எழுதியவர்: mohan September 27, 2019, 11:03 am




You must be logged in to post a comment.