திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வடகவுஞ்சியை சேர்ந்த விவசாயி அரிச்சந்திரன் என்பவருக்கும் இதே ஊரை சேர்ந்த பெருமாள் என்பவருக்கும் நிலத்தகராறு தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பெருமாள் என்பவர் தனது தோட்டத்தில் மாடுகளை விட்டு அரிச்சந்திரன் மேய்த்து நாசம் செய்ததாக கொடைக்கானல் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். இருவரையும் விசாரித்த போலீசார் அரிச்சந்திரன் தனது மாடுகளை விற்று 3 வருடம் ஆகிய நிலையில் எப்படி பயிர்களை நாசம் செய்யமுடியும் என விசாரணையில் தெரிய வந்தது.
அரிச்சந்திரன் மீது பொய்புகார் கூறிய பெருமாளை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த பெருமாள், அவரது மகன் பன்னீர்செல்வம், ஆகியோர் வெளியூரில் இருந்து அடையாளம் தெரிந்த பெயர்தெரியாத 10 பேர் கொண்ட கூலிபடையினரை அழைத்து வந்து தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்த அரிச்சந்திரனை இரும்பு ராடால் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும் இதனை தடுக்க வந்த அவரது மனைவி செல்வமணி என்பவரையும் தாக்கியதாகவும் இதனால் படுகாயம் அடைந்த அரிச்சந்திரன் மயக்கமடைந்த நிலையில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தகவல் கொடுத்ததன் பேரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடா்பாக வடகவுஞ்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




You must be logged in to post a comment.