தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் இராமநாதபுரம் நகர் மற்றும் ஒன்றியம் சார்பில் இராமநாதபுரம் வெளிப்பட்டணம் காளிகா தேவி அம்மன் கோயில் வளாகத்தில் விஸ்வபிரம்ம ஜெயந்தி நடந்தது. காளிகா தேவி அம்மன் கோயில் அறங்காவலர் எஸ்.ராஜகோபால் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நா. மலைக்கண்ணு, அமைப்புச் செயலர் ஆ.பாஸ்கரன், துணைத்தலைவர்கள் ஆர்.முருகவேல், ஆர்.தேவமாதவன் முன்னிலை வகித்தனர்.போட்டிகளில் வென்றோர், கடந்தாண்டு 10, +2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த விஸ்வ கர்ம சமுதாய மாணவ, மாணவியருக்கு நெல்லை ஏர்வாடி கலைமாமணி எஸ்.ராதாகிருஷ்ணன், கவிஞர் சொர்ணபாரதி, இதழாசிரியர் குரு.ஜெயச்சந்திரன் ஆகியோர் பரிசு வழங்கினர். விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் நா. மலைக்கண்ணு, கலைமாமணி எஸ்.ராதாகிருஷ்ணன், கவிஞர் சொர்ணபாரதி, இதழாசிரியர் குரு.ஜெயச்சந்திரன் ஆகியோர் கூறுகையில், விஸ்வபிரம்ம ஜெயந்தி தினமான செப்.17 ஆம் தேதியை தேசிய தொழிலாளர் தினமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும், என்றனர்.
விஸ்வகர்ம நண்பர்கள் சங்க மாவட்ட செயலர் எஸ்.முத்துக்குமார்,அமைப்புச்செயலர்யு.எஸ்.பாலசுப்ரமணியன், துணை செயலர் பெ.பால பாண்டியன், துணைத் தலைவர் ஜீவா.அருண் பிரபு, நகர் தலைவர் எம்.பெருமாள், செயலர் கே.விஜயன், பொருளர் என்.கருப்பையா, ஒன்றிய தலைவர் எம்.எஸ்.ஆர்.கணேசன், செயலர் எம்.ரவீந்திரன்,நகர் துணைத் தலைவர் எம்.சின்ன முருகன், நகர் இளைஞரணி அமைப்பாளர் பூ.கோவை மணி,நிரஞ்சனா வுட் ஒர்க்ஸ் கே. சூர்ய பிரகாஷ்உள்பட பலர் கலந்து கொண்டனர்.







You must be logged in to post a comment.