17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஐநா சபை மாணவர் பிரதிநிதிகளாகும் இராமநாதபுரம் கல்லூரி மாணவியர்

ஐநா சபை மாணவர் பிரதிநிதிகளாகும் இராமநாதபுரம் கல்லூரி மாணவியர்

எழுதியவர்: mohan September 27, 2019, 9:54 am

இராமநாதபுரம் முகமது தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சி கல்லுாரி மாணவி அப்ரின் வஜிஹா, செய்யதம்மாள் கலை, அறிவியல் கல்லுாரி மாணவி மகேஸ்வரி ஆகியோர் ஐக்கிய நாடுகள் சபை மாணவர் பிரதிநிதிகளாக நியமிக்கப்படவுள்ளனர்.இந்திய அரசு மனித வள மேம்பாடு மற்றும் விளையாட்டு, இளைஞர் நலம் அமைச்சகத்தின் கீழ் இயங்கும்  நேரு யுவகேந்திரா சார்பில் கல்லுாரி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சி மாவட்டம் தோறும் நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் விளையாட்டு, மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் தேசிய அளவில் மாணவர்களை தேர்வு செய்து டில்லியில் இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சியை முதல் முறையாக நடத்தினர். இதில் நாடு முழுவதும் 80 மாணவர் தேர்வாகினர்.

இதில் ராமநாதபுரம் முகமது தஸ்தகீர் கல்வியியல் கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவி அப்ரின் வஜிஹா, செய்யதம்மாள் கலை, அறிவியல் கல்லுாரி மாணவி மகேஸ்வரி தேர்வு பெற்றனர். இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சியில் சுகாதாரம் குறித்து பேசிய மாணவி அப்ரின் வஜிஹாவை, கல்லுாரி தாளாளர் முகமது யூசுப், முதல்வர் சோமசுந்தரம், நேரு யுவகேந்திரா இளையோர் ஒருங்கிணைப்பாளர் நோவான் அக்ரம், சர்வ சிக்ஷ அபியான் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் ஆகியோர் பாராட்டினர்.நேருயு வகேந்திரா ஒருங்கிணைப்பாளர் நோவான் அக்ரம் கூறுகையில், ”வளர்ந்து வரும் மாவட்டங்களில் ராமநாதபுரம் உள்ளது. டில்லியில் நடந்த இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சியில் தமிழக அளவில் பங்கேற்ற இராமநாதபுரம் மாணவியர் (அப்ரின் வஜிஹா, மகேஸ்வரி) இருவரும் ஐநா சபை மாணவ பிரதிநிதிகளாக நியமிக்கப்படவுள்ளனர்,” என்றார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!