17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போளூர் அருகே ஜமுனாமரத்தூர் வனப்பகுதியில் பீமன் நீர்வீழ்ச்சியில் நீா் வரத்து அதிகாிப்பு.

போளூர் அருகே ஜமுனாமரத்தூர் வனப்பகுதியில் பீமன் நீர்வீழ்ச்சியில் நீா் வரத்து அதிகாிப்பு.

எழுதியவர்: mohan September 26, 2019, 7:44 pm

போளூர் அருகே ஜவ்வாதுமலை பகுதியில் ஜமுனாமரத்தூர் வனப்பகுதியில் பீமன் நீர்வீழ்ச்சியில் தற்போது பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோமுட்டேரி கிராமத்தின் அருகே கோமுட்டேரி ஆறு, செங்குத்தான பாறைகளில் சுமார் 70 அடி உயரத்திலிருந்து விழும் பீமன் நீர்வீழ்ச்சியில் ஜவ்வாது மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியுடன் குளித்து வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஜவ்வாதுமலை பகுதியில் ஜமுனாமரத்தூரில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் வனப்பகுதியில் பீமன் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது தற்போது பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோமுட்டேரி கிராமத்தின் அருகே கோமுட்டேரி ஆறு, செங்குத்தான பாறைகளில் சுமார் 70 அடி உயரத்திலிருந்து விழுந்து பீமன் நீர்வீழ்ச்சியாக காட்சியளிக்கிறது.

இந்தப் பகுதியில் சிறிய நீர்வீழ்ச்சிகளும் அமைந்துள்ளதால் பெண்களும் குழந்தைகளும் நீராட ஏற்றதாக உள்ளது. இந்தப் பகுதி ஆண்டு முழுவதும் பசுமையாகவும் குளிர்ச்சியாகும் காணப்படுகிறது.இந்த நீர்வீழ்ச்சிக்கு பீமன் நீர்வீழ்ச்சி என பெயர் வரக் காரணம் முன்காலத்தில் பீமன் பேரண்டச்சியிடம் சண்டை இட்டதாகவும் சண்டையிடும்போது பீமனும் முட்டி போட்டதாகவும் கூறுகின்றனர். பீமன் கால் பதித்த இடம் இந்த நீர்வீழ்ச்சியில் இன்றும் காணப்படுவதால் இந்த நீர்வீழ்ச்சி பீமன் நீர்வீழ்ச்சி என்று கூறுகின்றனர்.ஜவ்வாது மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியுடன் குளித்து வருகிறார்கள்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!