திண்டுக்கல் மாவட்டம் ,நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முசுவனூத்து ஊராட்சி, கல்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கிராம இளைஞர்கள் நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் லாரன்ஸிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவில் கல்கோட்டையில் பல ஆண்டுகளாக சாக்கடை வசதி இல்லாததால் கிராமத்தில் மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி கிடக்கிறது .
இதனால் பல பேருக்கு காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்டு அவதிப்படுகிறோம் .இது குறித்து பலமுறை முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை..எங்கள் ஊருக்கு குடிநீர் வசதி இல்லை. அதைப்போன்று சாலை மற்றும் குடிநீர் ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து மனுவில் கூறியிருந்தார்.மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் லாரன்ஸ் இது
குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர்களிடம் வாக்குறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) செல்வராஜ்யிடம் சென்று இதே கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார்கள். இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கவும் கூறியதைத் தொடர்ந்து அங்கிருந்த இளைஞர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் போதுராஜன், நகரச் செயலாளர் திருப்பதி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பலர் உடனிருந்தனர்.
நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா




You must be logged in to post a comment.