17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலையில் மழை.விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலையில் மழை.விவசாயிகள் மகிழ்ச்சி

எழுதியவர்: mohan September 26, 2019, 7:07 pm

திருவண்ணாமலையில் நேற்று 25.09.19 பகலில் வெயில் அதிகமாக காணப்பட்டது. எனினும் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இந்த நிலையில் மாலை 5 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது.தொடர்ந்து இடி, மின்னுலுடன் மழை வலுத்தது. சுமார் 1½ மணி நேரம் பலத்த மழைபெய்தது. சாலைகளில் மழை நீர்பெருக்கெடுத்து ஓடியது. திருவண்ணாமலை காந்திநகர் 10-வது தெருவில் வெள்ளம் போல் மழைநீர் சூழ்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

மழைக்காலங்களில் சுற்றுப்புற பகுதியில் இருந்து அனைத்து மழைநீரும் இங்குதான் வந்து சேருகிறது. எனவே மற்ற பகுதியில் இருந்து மழை நீர் இங்கு வராமல் கீழ்நாச்சிப்பட்டு, கீழ்நாத்தூர் ஏரிகளுக்கு செல்லும் வகையில் மாற்றுப் பாதையில் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதேபோல் செங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருவண்ணாமலை காந்திநகர் தெருக்களில் பாய்ந்தோடிய மழை வெள்ளம். கலசபாக்கத்தில் கனமழை பெய்தது.

சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 110 மி.மீட்டரும், கலசபாக்கத்தில் 105 மி.மீ மழையும் பதிவானது. வந்தவாசி சாத்தனூர் அணைபகுதியில் பலத்த மழை பெய்தது மற்ற இடங்களில் லேசான மழை பெய்தது. திருவண்ணாமலை தாலுகா மேல் கச்சிதாபட்டு கிராமத்தில் குப்பன் என்பவரது பசு மாடு மின்னல் தாக்கி இறந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- திருவண்ணாமலை-110, ஆரணி-17.8, செய்யாறு-6.5, சாத்தனூர் அணை-20.6, செங்கம்-27.7, வந்தவாசி-39, போளூர்-12.2, தண்டராம்பட்டு-16, கலசபாக்கம்-105, சேத்துபட்டு-12.4, கீழ்பென்னாத்தூர்-17, வெம்பாக்கம்-12.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!