திருவண்ணாமலை மாவட்டம் மோத்தக்கல் ஊராட்சியை சேர்ந்தது குருக்கிலாம்பூர் கிராமம். இந்த கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் குடிநீருக்காக பொது கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த
கிணற்றில் குருக்கிலாம்பூர் கிராம மக்களும், அருகில் உள்ள ஏரி தண்டா கிராம மக்களும் தண்ணீர் எடுத்து வந்துள்ளனர். தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், குடிநீர் இல்லாமல் குருக்கிலாம்பூர் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். வியாழனன்று தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்த குருக்கிலாம்பூர் பழங்குடியின மக்கள், குடிநீர் கேட்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் கேட்டு பழங்குடி மக்கள் காத்திருப்பு போராட்டம்
எழுதியவர்: mohan September 26, 2019, 6:55 pm




You must be logged in to post a comment.