17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » இந்திய அளவிலான இளையோர் பாராளுமன்றத்தில் தமிழக மாணவி பங்கேற்பு.

இந்திய அளவிலான இளையோர் பாராளுமன்றத்தில் தமிழக மாணவி பங்கேற்பு.

எழுதியவர்: mohan September 26, 2019, 6:32 pm

கடந்த 18,19 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் நடந்த இந்திய அளவிலான இளையோர் பாராளுமன்றத்தில் சித்தார்கொட்டை பகுதியை சேர்ந்த கல்வியியல் கல்லூரி மாணவி அஃப்ரின் வஜிஹா பங்கேற்று தமிழகத்திற்குப்பெருமை சேர்த்துள்ளார்.பேச்சுத்திறமையில் சிறந்து விளங்கும் மாணவி அஃப்ரின் வஜிஹா இதுவரை பல்வேறுபட்ட மாவட்ட மாநில அளவிலான பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்றவராவார்.

அதுமட்டுமின்றி mime என்று சொல்லப்படும் மௌனமொழி நாடகம் நடித்து கடந்த 2018ஆம் ஆண்டு வில் மெடல்ஸ் உலக சாதனைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார் மாணவி அஃப்ரின் வஜிஹா.இவர் தற்பொழுது முகமது சதக் தஸ்தஹீர் கல்வியியல் கல்லூரியில் B.Ed இரண்டாம் ஆண்டு பயின்றுவருகிறார்.இந்த இளையோர் பாராளுமன்றத்தில் எல்லா மாநிலங்களிலிருந்தும் மாவட்ட,மாநில அளவிலான இளையோர் பாராளுமன்றத்தில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!