தமிழ்நாடு காவல்துறை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சமுதாய விழிப்புணர்வு மற்றும் குறைதீர்க்கும் முகாம் நெல்லையில் உள்ள கருப்பந்துறையில் நடைபெற்றது.இந்த குறைதீர் முகாமில் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு காவல்துறையிடம் சில அடிப்படையான தேவைகள் குறித்த கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
அதில் தெரு விளக்கு அமைத்து கொடுத்தல், நூலகம் அமைத்து கொடுத்தல், அருகில் உள்ள ஆற்று பகுதியில் உள்ள அமலை செடிகளை அகற்றி கொடுத்தல், மற்றும் ஊர் விலக்கு பகுதியில் ஆட்டோ நிறுத்தத்தை சரிசெய்து கொடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.
காவல்துறை சார்பாக CCTV பயன் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இளைஞர்களிடம் அரசு வேலைவாய்ப்பினை பற்றிய தகவல்கள் மற்றும் அரசு உதவி எப்படி பெற முடியும் என்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.இந்த முகாமில் காவல் துறை சார்பில் சேகர் உதவி ஆணையாளர் ( சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ),காசிப்பாண்டியன் நெல்லை நுண்ணறிவு பிரிவு ( உதவி ஆய்வாளர் ), மற்றும் சிறப்பு ஆய்வாளர்கள், பாலசுப்பிரமணியன், மனோகரன், பிரம்மநாயகம் ( சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ), ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக காவலர் குரல் பத்திரிகையின் இணை ஆசிரியர் ஜபருல்லா கலந்து கொண்டார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.