மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி ஈஸ்வரி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும்,அதே ஊரில் உள்ள தனது உறவினரான அரசியல் பிரமுகர் பழனிச்சாமி என்பவருடன் தனியாக வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று வீட்டில் தனியாக இருந்த ஈஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.சம்பவமறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் சார்லஸ் தலைமையிலான போலிசார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரனை நடத்தி வருகின்றனர்.
மேலும் கணவருடன் பிரிந்து வாழும் ஈஸ்வரிக்கும், கள்ளக்காதலன் பழனிச்சாமிக்கு நேற்று தகராறு ஏற்பட்டதாகவும் இதனால் மனமுடைந்து இருந்த ஈஸ்வரி இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதாக போலிசாரின் முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.மேலும் இச்சம்பவம் குறித்த வழக்கு பதிவு செய்த போலிசார் தப்பி ஓடிய கள்ளக்காதலன் பழனிச்சாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.




You must be logged in to post a comment.