17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சித்தூர் பஸ் நிலையத்தில் சுகாதார அதிகாரி ஆய்வு

சித்தூர் பஸ் நிலையத்தில் சுகாதார அதிகாரி ஆய்வு

எழுதியவர்: mohan September 26, 2019, 5:57 pm

வேலூர் மாநகராட் சி 1_வது மண்டலம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோஸ்டேண்டில் காலி மதுப்பாட்டில்களை அகற்ற சுகாதார அதிகாரி பாலமுருகன் உத்தரவிட்டார் மழை காலத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க மாநகராட்சி சுகாதார துறை இன்று 26-ம் தேதி காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் காலி மதுப்பாட்டில் போடப்பட்டு குப்பை கூளங்கள் இருந்தன. மழை நீர் தேங்கி துர்நாற்றம் அடித்தது. சுகாதார அலுவலர் பாலமுருகன் ஆட்டோ டிரைவர்களை கடிந்து கொண்டார். உங்களுக்கு நோய் வருவதுடன் பயணிகளும் பாதிக்கப்படுவார்கள் என்று அறிவுரை கூறினார். அந்த இடத்தை சுத்தம் செய்ய உத்தரவிட்டதுடன் இடத்தை ஒழுங்காக பராமரிக்க வேண்டும் என்று ஆட்டோ டிரைவர்களுக்கு மீண்டும் அறிவுரை கூறினார். டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை ஊழியர்கள் பொதுமக்களுக்கு கொடுத்தனர்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!