தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மகேந்திர மங்கலம் மாரண்டஅள்ளி பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் வைத்திருக்கும் பாத்திரங்கள் தளவாட பொருட்கள் அடிக்கடி திருட்டு போனது. இதுகுறித்து பொதுமக்கள் போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர். இதை அடுத்து போலீசார் தீவிரமாக ரோந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மகேந்திரமங்கலம் அருகே உள்ள சீங்கேரியை சேர்ந்த விவசாயி அனுமந்தன் என்பவருடைய வீடு மற்றும் கொட்டாயில் இருந்து பாத்திரங்களை 3 வாலிபர்கள் திருடிச் சென்றனர். இதைப்பார்த்த அனுமந்தன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தார். பின்னர் அவர்களை மகேந்திரமங்கலம் போலீசில் மூன்று பேரும் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர் அப்போது அவர்கள் அதே பகுதியை சேர்ந்த வேலாயுதம் என்பவருடைய மகன்கள் ராமன் வயது 24. சந்தோஷ் வயது 21 மதகேரி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் ஜெயக்குமார் வயது 20 இவர்கள் மகேந்திரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் பாத்திரங்கள் இரும்பு தளவாட பொருட்களை திருடியது அவற்றை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் மூன்றுபேரும் சேர்ந்து மது குடித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அண்ணன் தம்பி உட்பட மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பாலக்கோடு அருகே விவசாயி வீட்டில் பாத்திரங்கள் திருடிய 3 பேர் கைது
எழுதியவர்: mohan September 26, 2019, 5:47 pm




You must be logged in to post a comment.