18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோட்டில் ரசாயனம் கலந்த வாழைப்பழம் விற்பனையால் பொதுமக்களுக்கு அவதி

பாலக்கோட்டில் ரசாயனம் கலந்த வாழைப்பழம் விற்பனையால் பொதுமக்களுக்கு அவதி

எழுதியவர்: mohan September 26, 2019, 5:41 pm

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் வாழைப்பழம் வியாபாரிகள் ரசாயனம் கலந்த வாழைப்பழங்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுத்தி வருகிறது.பாலக்கோடு நகர் பகுதியில் உள்ள வாழைப்பழம் மண்டிகளில்  வாழைக்காய் மீது ரசாயனம் கலந்த வேதிப்பொருளை தண்ணீரில் கலந்து 24மணி நேரம் வைத்தால் பச்சையாக இருக்கும். வாழைகாய் மஞ்சள் நிறத்தில் பழுத்து வாழைப்பழமாக விற்பனைக்கும் அனுப்படுகின்றது.இந்த வாழைப்பழங்களை உண்பதால் உடல் உபாதைகள், கேன்சர் போன்ற கொடிய நோய்கள் தாக்குகிறது. மேலும்

பேக்கரி கடைகள், பாஸ்ட்புட் கடைகள், தாபா ஓட்டல் மற்றும் நகரத்தில் உள்ள ஓட்டல்கடைகளை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் கலந்த பொருட்கள் மற்றும் காலவதியான குளிர் பானங்களை விற்பனை நடைபெறுவதாகவும் பஸ்நிலையத்தில் உள்ள பலகார கடைகளில் விற்கப்படும் திண்பன்டங்கள், எண்ணெய் பலகாரங்களில் செய்திதாள்களை பயன்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!