இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் கலை , அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் பி.எட்., கல்லூரி வளாகத்தில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை கருத்தரங்கு நடந்தது. ஐஏஎஸ் ஓய்வு அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமை வகித்தார். பெண் கல்வி அவசியம் குறித்து பேசிப அவர், பெண்ணியம் காக்க பெண்கள் தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.எம்ஜிஆர் பி.எட் கல்லூரி முதல்வர் முனைவர் கே.சி.முத்து முன்னிலை வகித்தார்.
பெண்கள் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.நிர்மலா குமாரி வரவேற்றார். ஊரக வளர்ச்சி மகளிர் திட்ட உதவி இயக்குநர் செல்வராஜ், இராமநாதபுரம் மகளிர் திட்ட அலுவலர் குருநாதன், டாக்டர் சினேகா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மண்டபம் வட்டார அலுவலர் பாலாம்பிகா, எம்ஜிஆர் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் பி.எட் கல்லூரி தாளாளர் அ.நாசர் அலி, சென்னை கற்பகா பவுணடேஷன் நிர்வாகி டாக்டர் சுஜாதா, வட்டார விரிவாக்க திட்ட பயிற்றுநர் ஜி.வித்யா சங்கரி, குமராட்சி உள்பட பலர் பங்கேற்றனர். மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், கல்லூரி மாணவ, மாணவியர், கல்லூரி பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
உச்சிப்புளியில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை கருத்தரங்கு
எழுதியவர்: mohan September 26, 2019, 5:35 pm




You must be logged in to post a comment.