வேதாளை மற்றும் மரைக்காயர்பட்டிணம் பகுதியில் மீண்டும் இறால், மீன் பண்ணைகளின் தீமையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் ஆட்சியர் மூலம் பண்ணைகளை அப்புறப்படுத்தினர். ஆனால் மீண்டும் அப்பகுதியில் பண்ணை வைக்கும் வகையில் ராட்சத பள்ளங்கள் அமைப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது முடிந்து சில மாதங்களே ஆன நிலையில் தற்போது அதற்கு எதிர்புறம் புதிதாக பெரிய அளவிலான ராட்சத குளங்கள் தோண்டபட்டு வருகிறது. இதனை விசாரிக்கையல் குளம் தோண்டுவதாக கூறப்பட்டது. ஆனால் மீண்டும் வேறு ஒரு தனியார் நிறுவனம் மூலமாக வேதாளை மரைக்காயர்பட்டிணம் கடற்கறை சாலையின் அருகே மீன்பண்ணை அமைப்பதற்காக இந்த ராட்சதகுழிகளை தோண்டிவருகிறார்கள் என்பது தெரியவந்தது.
ஆகவே இதனை தடுக்கும் வகையில் அரசு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மக்கள் பயன்பாட்டுக்கு தோண்டும் குளமாக இருந்தால் அதை வெளிப்படை தன்மையுடன் மக்களுக்கு அறிவித்து பதட்டத்தை குறைக்க வேண்டும்.







You must be logged in to post a comment.