கீழக்கரை நகராட்சியில் பல்லாயிரகணக்கான மக்கள் வசித்து வருகின்றனர், அதே போல் வழங்கும் சேவையை விட அதிகமான வரி வசூல் செய்வதிலும், மக்களின் தேவைகளை ஊதாசீனப்படுத்துவதற்கும் பெயர் போன நகராட்சி நிர்வாகம்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சிறுவன் ஒருவன் நாய் கடியால் பரிதாபமாக இறந்தான், அதே போல் ஒரு பெண்ணும் பாதிக்கப்பட்டார். பின்னர் அதை தொடர்ந்து பல சமூக நல அமைப்புகளின் வற்புறுத்தலின் அடிப்படையில் நாய் வேட்டை தொடங்கியது. பின்னர் அரைகுறையாக முடிக்கப்பட்டது.
தற்சமயம் மீண்டும் வெறி நாய்களின் தொல்லை தலை தூக்கியுள்ளது. கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கீழக்கரை மக்கள் நாய் கடிக்கு ஆளாகியுள்ளனர். ஆனால் இதுவரை நகராட்சி நிர்வாகத்தால் பொதுமக்களுக்கு எந்தவித உத்திரவாதமும் வழங்கவில்லை.
ஒவ்வொரு பிரச்சினைக்கும் சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்தால் மட்டுமே விழித்து கொள்வோம்.. இல்லையெனில் உறங்குவோம் என்ற மனநிலையில் நகராட்சி இருந்தால், எதற்கு அதிகாரிகள்??, எதற்கு மக்கள் வரி செலுத்தத வேண்டும்??.







You must be logged in to post a comment.