18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை மற்றும் வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை இணைந்து நடத்திய “கடிதப்போட்டி”யில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு…

சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை மற்றும் வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை இணைந்து நடத்திய “கடிதப்போட்டி”யில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் September 25, 2019, 11:55 pm

சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை மற்றும் வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை இணைந்து தேசிய அஞ்சல் தினத்தை முன்னிட்டு நடத்திய கடிதப்போட்டியில் ”சத்தியபாதை” எனும் தலைப்பில் சிறப்பாக கடிதம் எழுதி மூவர் வெற்றிபெற்றனர்.

இந்த போட்டியில் பா.நாகசுந்தரி (தொழில் முனைவோர்) முதலிடம் பெற்று 3,000/-ம், து.சேக் முகமது ரசீது (செய்யது ஹ்மீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்) இரண்டாம் இடம் பெற்று ரூ.2,000/-ம், க.ரம்யா (அரசு மகளிர் கல்லூரி மாணவி)மூன்றாம் இடம்பெற்று ரூ1,000/-ம் பரிசாகப்பெற்றனர்.

இவர்களுக்கு பரிசு தொகையுடன் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பட்டது. இதனை மண்டபத்தில் அமைந்துள்ள வில் மெடல்ஸ் அலுவலகத்தில் 25/9/2019 அன்று மாலை 4 மணி அளவில் வில் மெடல்ஸ் தலைவர் கலைவாணி வழங்கினார்.

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் கீழை நியூஸ்-சத்தியபாதை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!