இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பி.கீரந்தையைச் சேர்ந்தவர் சேதுபதி மனைவி அங்காள ஈஸ்வரி,26. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். திருமணமான நாள் முதல் அங்காள ஈஸ்வரியிடம் 10 பவுன் நகை, ரூ.ஒரு லட்சம் ரொக்கம் வரதட்சணை கேட்டு சேதுபதி துன்புறுத்தி வந்தார். இதனால் அங்காள ஈஸ்வரி கோபித்துக் கொண்டு மருதங்கநல்லூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.இந்நிலையில் கடந்த 23.4.2013ல், மருதங்கநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் நின்ற அங்காள ஈஸ்வரியிடம், தகராறு செய் 3 அவரது கழுத்தில் இருந்த தாலியை சேதுபதி அறுத்தார்.
அப்போது சேதுபதியின் சகோதரி சண்முகவள்ளி 35, காஞ்சிரங்குளம் ராமையா மகன் சப்பானி 34, ஆகியோர் சேதுபதிக்கு உடந்தையாக செயல்பட்டனர். தாலியை அறுத்த அவமானம் தாங்காத அங்காள ஈஸ்வரி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.தனது மகளை தற்கொலை செய்ய தூண்டியதாகவும், வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் சேதுபதி, சண்முகவள்ளி, சப்பானி ஆகியோர் மீது அங்காள ஈஸ்வரியின் தந்தை வன்னிமுத்து,போலீசில் புகார் அளித்தார். இதன்படி, சேதுபதி உள்பட 3 பேரை பேரையூர் போலீசார் கைது செய்தனர். இராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து இந்த வழக்கு இறுதி விசாரணையில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி, தற்கொலைக்கு தூண்டிய சேதுபதி, சண்முகவள்ளி, சப்பாணி ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாத காலம் சிறைத்தண்டனை விதித்து, மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார்.
முதுகுளத்தூர் அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் உள்பட மூவருக்கு 10 ஆண்டு சிறை
எழுதியவர்: mohan September 25, 2019, 8:01 pm




You must be logged in to post a comment.