17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு அரசு மகளிர் பள்ளியில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர். நோய்கள் பரவும் அபாயம். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பாலக்கோடு அரசு மகளிர் பள்ளியில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர். நோய்கள் பரவும் அபாயம். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

எழுதியவர்: mohan September 25, 2019, 7:36 pm

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் 2200 மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று 24.09.19 பெய்த மழையால் பள்ளி வளாகத்தில் மழைநீர் குழம் போல் தேங்கி காணப்படுவதால் பள்ளி மாணவிகள் மழைநீரில் விளையாடி வருகின்றனர். நீண்ட நாட்கள் மழைநீர் தேங்கினால் பல்வேறு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மகளிர் பள்ளியில் ஒரு புறம் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான கட்டிடமும் மற்றொரு புறம் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு  வரை இயங்கி வருகின்றது. பள்ளியின் இருப்புறத்திலும் சுமார் 10க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளது. தமிழக அரசு மழைநீர் சேமிப்பு பற்றி மாணவர்களிடையை விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் மழை காலங்களில் பள்ளியில் உள்ள கட்டிடத்தில் இருந்து வரும் மழைநீரை சேமிக்க சேமிப்பது என்பது பற்றி தலைமை ஆசிரியர்களுக்கு தெரியாததால் பல லட்சம் லிட்டர் மழைநீர் விணாகுகின்றது. மேலும் ஒவ்வொரு வகுப்பறை கட்டிடத்திலும் சரியான முறையில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்திருந்தால் நிலத்தடி நீர் உயர்ந்து பள்ளிக்கு தேவையான தண்ணீரை பெற்றிருக்க முடியும்.எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பள்ளியில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கவும் மழை நீரை சரியான முறையில் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!