முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதவியல் துறையின் சார்பாக போட்டித் தேர்வில் தகுதிப்பெற சுலப வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்வை கணிதவியல் இரண்டாமாண்டு மாணவி ஆஷிகா இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார். கணிதவியல் துறைத்தலைவர் குணவதி வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் Dr.A.R நாதிராபானு கமால் மாணவிகளை எல்லா விதமான போட்டி தேர்வுகளில் கலந்துக் கொள்ள வேண்டும் என்றும், இன்று முதல் அவற்றிற்கு முயற்சி எடுத்துக் கொண்டால் வாழ்வில் முன்னேறலாம் என்றும், வாழ்வில் முன்னேற, வாழ்வின் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கும் தகுதி தேர்வு நிச்சயம் உதவி செய்யும் என்றும் கூறி தலைமையுரை ஆற்றினார்.
முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக சிறப்பு விருந்தினர் இராமநாதபுரம் அழகப்பா மாலை நேரக் கல்லூரி உதவிப் பேராசிரியர் Dr.k.காளிராஜ், M.Sc, M.Phil, B.Ed, Ph.D அவர்களுக்கு கல்லூரி முதல்வர் நினைவுப் பரிசு வழங்கினார்.
மேலும், சிறப்பு விருந்தினர் மாணவிகளிடம் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள கணக்குகளை செய்து பார்க்குமாறும்,”முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்றும், மாணவிகளுக்கு கணக்குகளை தீர்க்கும் எளிமையான வழிமுறைகளை எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார். இறுதியாக கணிதவியல் உதவிப் பேராசிரியை அருணா நன்றியுரை வழங்க இந்நிகழ்வு இனிதே நிறைவுப் பெற்றது.













You must be logged in to post a comment.