மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் உசிலம்பட்டி கோட்டாச்சியர் தலைமையில் நடைபெற்றது, இந்த முகாமில் கலந்து கொண்டு மனு அளித்த 50க்கும் மேற்பட்டோருக்கு உடனுக்குடன் தீர்வு.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைந்திர்க்கும் முகாம் உசிலம்பட்டி கோட்டாச்சியர் பானுகோபன் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் உசிலம்பட்டி, பேரையூர் பகுதிகளிலிருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.இந்த முகாமில் 108 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் அந்த மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்த அதிகாரிகள் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவித்தொகை மற்றும் சக்கர நாற்காலி, கை குச்சிகள் வழங்கப்பட்டது. மேலும் உள்ள மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என கோட்டாச்சியர் பானுகோபன் தெரிவித்தார்.மேலும் இந்த முகாமில் பரிசோதனைக்காக எந்த மருத்துவரும் வராத நிலையில் அவர்மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கு இது போன்ற முகாம்களிலேயே மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்து அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்தனர்.







You must be logged in to post a comment.