17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » துப்புரவு பணியாளர்களுக்கான மறுவாழ்வு தேசிய நல ஆணையத்தின் ஆய்வு கூட்டம்

துப்புரவு பணியாளர்களுக்கான மறுவாழ்வு தேசிய நல ஆணையத்தின் ஆய்வு கூட்டம்

எழுதியவர்: mohan September 25, 2019, 5:18 pm

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் துப்புரவு பணியாளர்களுக்கான மறுவாழ்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து தேசிய நல ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ்கிர்மானி ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, வருவாய் அலுவலர் ரத்தினசாமி, போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, மு.பெ.கிரி எம்.எல்.ஏ. மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் சங்கங்களின் தலைவர்கள், நலக்குழு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் துப்புரவு பணியாளர்கள் தேசிய நல ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ்கிர்மானி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கைகளால் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கான மறுவாழ்வு சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 2013-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்டவாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழகத்தில் கடந்த 2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டுகளில் பல்வேறு நிலைகளில் கைகளால் துப்புரவு பணிகள் ஈடுபட்ட 25 பேர் பணியின் போது உயிரிழந்து உள்ளனர். எனவே கைகளால் துப்புரவு பணியை செய்வது ஒழிக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் 6 மாவட்டங்களில் எங்கள் ஆணையத்தின் ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. இதில் 1500 பேர்களின் மறுவாழ்விற்கு தலா ரூ.40 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. தற்போது துப்புரவு பணியில் கழிவுநீர் உறிஞ்சும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 4 பகுதிகளில் சோதனை அடிப்படையில் ரோபோ மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த சோதனை முடிவின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் ரோபோ மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்களின் சம்பளம், சுகாதாரம், மருத்துவம், காப்பீடு, பாதுகாப்பு உபகரணங்கள், வீடுகள், கல்வி ஆகியவை குறித்து நகராட்சி, பேரூராட்சி, தாட்கோ, முன்னோடி வங்கி உள்பட அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.மத்திய அரசின் துப்புரவு பணியாளர்கள் நல தேசிய ஆணையம் மூலம் துப்புரவு பணியாளர்களின் வளர்ச்சிக்கு ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் நோக்கம் கைகளால் துப்புரவு பணி செய்பவர்கள் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மேலும் துப்புரவு பணியாளர்கள் நல தேசிய ஆணையத்தின் நடைமுறைகளை சரியாக நடைமுறைப்படுத்தாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.நகராட்சிகள், பேரூராட்சிகளில் துப்புரவு பணிகளில் எந்திரங்களை அதிகமாக பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், துப்புரவு பணிகளில் 34 ஆயிரம் பேர் ‘அவுட்சோர்சிங்’ முறையில் பணி புரிந்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் பணியை நிரந்தரமாக்க கோரிக்கை வைத்து உள்ளனர்.தமிழக அரசிடம் இந்த பணியாளர்களை நிரந்தரமாக்குவதற்கு என்னுடைய பரிந்துரையை அளித்து உள்ளேன். தமிழக அரசும் நல்ல பதிவு தருவதாக கூறியுள்ளார்கள். இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து துப்புரவு பணியாளர்களும் படிப்படியாக நிரந்தரம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.கர்நாடக மாநிலத்தில் என்னுடைய பரிந்துரையை ஏற்று முதற் கட்டமாக 13 ஆயிரம் பேர் துப்புரவு பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 2019-20-ம் ஆண்டு 2-ம் கட்டமாக 19 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் நிரந்தரம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாவட்டங்களில் துப்புரவு பணியாளர்கள் நல தேசிய ஆணையத்தின் செயல்பாடுகள் கவனிப்பதற்காக பொறுப்பு அலுவலர் ஒருவர் நியமிக்கப்படுவார். மேலும் தற்போது மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டங்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!