தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. தேசியக் கல்வி கொள்கை 2019 ஐ திரும்ப பெற வேண்டும், அரசு மூடிய பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும். தமிழ் வழிப் பள்ளிகளை அழிவில் இருந்து மீட்க வேண்டும், தொடக்கக் கல்வித்துறையை சீரழிக்கும்
அரசாணை 100,101, 145, 164 ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.25 முதல் செப்.29 வரை கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார இயக்கம் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் மு.முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சே.முத்து முருகன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் தே.முருகன் ஆகியோர் பிரசார விளக்கவுரை ஆற்றினர். மாநில துணைத் தலைவர் அ.ரஹீம் பிரசார சிறப்புரை ஆற்றினார்.மாநில துணைத் தலைவர் பெ.அலோசியஸ் துரைராஜ் நன்றி கூறினார்.வட்டாரச் செயலாளர்கள் ஜெயசீலன் (மண்டபம்), ராமர் (கமுதி), அசோக்குமார் (ஆர்.எஸ்.மங்கலம்), பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ராபர்ட் ஜெயராஜ், மண்டபம் வட்டார பொருளாளர் ஐசன் சாமுவேல், திருப்புல்லாணி வட்டாரத் தலைவர் அன்புச்செல்வன், வட்டார பொருளாளர் கிறிஸ்டோபர் கென்னடி, மண்டபம் வட்டார உறுப்பினர்கள் டேவிட் கென்னடி, இன்பராஜ், ராமேஸ்வரம் வட்டார உறுப்பினர் அமல்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.இராமநாதபுரம், கீழக்கரை, சிக்கல், முதுகுளத்தூர், பரமக்குடி , கமுதி பகுதிகளிலும் பிரசாரம் இயக்கம் நடைபெற்றது.
இராமநாதபுரத்தில் கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
எழுதியவர்: mohan September 25, 2019, 5:05 pm




You must be logged in to post a comment.