மதுரை மாநகரில் இரவில் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகை திருட்டில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார்கள். அவர்கள் உத்தரவுப்படி அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் (குற்றம்) தனிப்படையினரான செந்தில் குமார் சார்பு ஆய்வாளர், பன்னீர்செல்வம் சிறப்பு சார்பு ஆய்வாளர், போஸ் தலைமை காவலர், வெங்கட்ராமன் முதல் நிலை காவலர் ஆகியோர் இணைந்து மதுரை மாநகரில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.
கடந்த 12.09.2019 ந் தேதி பெரியசாமி, சுதா ஆனந்த், ரவீந்திரன், ரெங்கசாமி ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 132 சவரன் தங்க நகைகள் மற்றும் குற்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் கைப்பற்றினர். மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில் 33 வீட்டை உடைத்து குற்றங்கள் செய்ததாகவும் ஒப்புக்கொண்டனர். துரிதமாக செயல்பட்ட தனிப்படையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், நேரில் அழைத்து பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்







You must be logged in to post a comment.