இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்ய து ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி கணிதத் துறை சார்பில் மேத் விங்ஸ் 2019 கணிதம் சார்ந்த ரங்கோலி, வினாடி-வினா, ஆய்வு கட்டுரை மாதிரி சமர்ப்பித்தல் போட்டிகள் நடந்தன. இப்போட்டியில் இராமநாதபுரம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி கணிதத் துறை எம்.எஸ்சி., இரண்டாம் ஆண்டு மாணவிகள்
எம்.பி.கீதா, எம்.சோனியா, எம்.எஸ்சி., முதலாமாண்டு மாணவிகள் ஆர்.கார்த்திகை செல்வி, எம்.சண்முகபிரியா, ஏ. மகாலட்சுமி, எம்.மகாலட்சுமி, எம்.பிரீத்தா , பி.எஸ்சி., மூன்றாமாண்டு பி.நித்யா ஆகியோர் முதல் பரிசு பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். சாம்பியன் பட்டம் வென்ற மாணவிகள், நன்கு பயிற்சி அளித்த பேராசிரியைகளை கல்லூரி முதல்வர் (பொ) சு. கீதா மாணிக்க நாச்சியார், கணிதத் துறை தலைவர் (பொ) ம.முத்தாளேஸ்வரி ஆகியோர் பாராட்டினர்.
இராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரி கணித துறை மாணவியர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்
எழுதியவர்: mohan September 25, 2019, 4:33 pm




You must be logged in to post a comment.