திண்டுக்கல் மாவட்டம், நூத்துலாபுரம் ஊராட்சி, குளத்துபட்டி கிராமத்தில் விவசாயம் சார்ந்த கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.கிராமத்திற்கு தேவையான குடிநீர் மற்றும் சாக்கடை வசதி சாலை வசதி ரேஷன்கடை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 வது முறையாக நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய
அலுவலகத்தில் மனு செய்து சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்..இந்தப் போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய செயலாளர் முத்தையா தலைமை தாங்கி போராட்டத்தில் பேசியதாவது:கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய அதன் காரணத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இதை அறிந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் வந்து உயர்மட்ட அதிகாரிகள் தற்சமயம் வேறு பணிக்காக சென்று இருப்பதால் சரியான நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் சமரசம் செய்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடிப்படை வசதிகள் வேண்டி முற்றுகை.
எழுதியவர்: mohan September 25, 2019, 4:25 pm




You must be logged in to post a comment.