திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய எழுத்தர் முருகன் செங்கோட்டை காவலர் குடியிருப்பில் புதர் மண்டிக்கிடந்த இடத்தை சுத்தப்படுத்தி கழிவு நீரை வீணாக்காமல் அதனை பயன்படுத்தும் வகையில் குடியிருப்பின் பின்பகுதியில் அழகான காய்கறி தோட்டம் அமைத்து அதை அழகான முறையில் பராமரித்தும் வருகிறார்.இதனை அறிந்து தோட்டத்தை காண வந்த இப்பகுதி பொதுமக்கள் காவல் நிலைய எழுத்தரை பாராட்டினர்.தலைமை காவலர் முருகன் சமூக அக்கறையோடு இதுவரை 1800 மரக்கன்றுகளை நட்டு அவற்றை சமூக ஆர்வலர்களின் உதவியுடன் பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.