17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிராம செவிலியர் பணிக்கு ஆட்கள் பரிந்துரை.

கிராம செவிலியர் பணிக்கு ஆட்கள் பரிந்துரை.

எழுதியவர்: mohan September 24, 2019, 5:18 pm

கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியுடைய பதிவுதாரர்கள் பரிந்துரை செய்யப்படவுள்ளனர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் தகவல். சென்னை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய செயலரால் அறிவிப்பு செய்யப்பட்ட கிராம சுகாதார செவிலியர் பணிக்காலியிடங்கள் தொடர்பாக மாநில அளவிலான உத்தேச பதிவுமூப்பு பட்டியல் தயார் செய்து அனுப்பபடவுள்ளது கீழ்க்கண்ட கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் பரிந்துரை செய்யப்படவுள்ளனர். கல்வித்தகுதி – நவ.15/ 2012க்கு முன்னர் சான்று பெற்றவர்கள்பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பயிலகங்களில் 18 மாத கால பயிற்சி முடித்து தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவு செய்திருக்க வேண்டும். அல்லது நவ.15 ,2012க்கு பின்னர் சான்று பெற்றவர்கள் பிளஸ் 2 தேர்ச்சியுடன் இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பயிலகங்களில் 2 வருட கால பயிற்சி முடித்து தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவு செய்திருக்க வேண்டும். நவ.15 ,2012க்கு பின்னர் சான்று பெற்றவர்கள் பிளஸ் 2 தேர்ச்சியுடன் இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பயிலகங்களில் 2 வருட கால பயிற்சி முடித்து தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவு செய்திருக்க வேண்டும்.வயது வரம்பு ஜூலை 1 அன்றைய தேதியில்)- அனைத்து வகுப்பினருக்கும் (ஆதிதிராவிட வகுப்பினர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம்) மாற்றுத்திறனாளிகள் உட்பட 18 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினர் 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளில் இதர பிரிவினரை சார்ந்தவர்கள் 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.மேற்குறிப்பிடப்பட்ட கல்வித்தகுதி, வயது வரம்பு உடைய நாளது தேதி வரை பதிவு செய்துள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த பதிவுதாரர்கள் செப். 25 ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு தங்களது வேலைவாய்ப்பு பதிவு அட்டை,அனைத்து அசல் கல்விச்சான்றுகள், குடும்ப அடையாள அட்டை, சாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் ஒளி நகல்களுடன் நேரில் வருகைதந்து தங்களது பதிவு விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.என மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!