17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட எட்டு நபர்கள் கைது

மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட எட்டு நபர்கள் கைது

எழுதியவர்: mohan September 24, 2019, 4:51 pm

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி  எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய சார்பு ஆய்வாளர்  சௌந்திரபாண்டி எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள DSP நகர் மெயின்ரோட்டின் அருகில் அமைந்துள்ள “இஸ்ரா பாலி ஸ்பா” என்ற மசாஜ் சென்டரில் திடீர் சோதனை மேற்கொண்டதில் அங்கு மசாஜ் சென்டர் என்ற பெயரில் வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து பணம் சம்பாதிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணை செய்ததில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது உதயகுமார் , சதீஸ் , கோவிந்தராஜ் , வினோத் , ஆரணி , டின்ரெய்லியூ  தொகிரோயூ , ஹினி  எட்டு நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு இரு சக்கர வாகனம் ஒன்பது கைபேசிகள் மற்றும் பணம் ரூ. 3000/- கைப்பற்றப்பட்டு அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பினார்.

செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!