18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் வெள்ள தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் வெள்ள தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

எழுதியவர்: mohan September 24, 2019, 4:31 pm

மதுரை டவுன் தீயணைப்புத் துறையின் சார்பாக மதுரை திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் வெள்ள தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை டவுன் தீயணைப்பு தீ தடுப்பு அதிகாரி  வெங்கடேசன்  தலைமையிலான குழுவினர் பொதுமக்களுக்கு வெள்ள காலங்களில் எவ்வாறு நம்மை தற்காத்துக் கொள்வது என எதையெல்லாம் வைத்து வெள்ளத்தில் நீந்தி கரை சேரலாம் என பொது மக்களோடு இணைந்து மதுரை திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினா்.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பொதுமக்களும் பங்கு பெற்று சிறப்பித்தனர். தீ தடுப்பு அதிகாரி  வெங்கடேசன் கூறுகையில் மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும் பொழுது எந்தெந்த பொருட்களை பயன்படுத்தி கரையேறலாம் என விளக்கம் அளித்தார்.  கார் டியூப் பிளாஸ்டிக் குடம் தர்மாகோல் மற்றும் காலி தண்ணி பாட்டில் பிளாஸ்டிக் கேன் உள்ளிட்ட பொருட்களை வைத்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம் என விளக்கம் அளித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!