திருவண்ணாமலை மாவட்டம் லாடவரம் அருகே திருமணம் செய்து கொள்வதாக நெருங்கிப் பழகிய வாலிபர் ஏமாற்றியதால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அடுத்த லாடபுரம் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி பெயர்
மாற்றப்பட்டுள்ளது. இவர் திங்கள் அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு வந்தார். அங்கு கேனில் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவரை விசாரித்தனர்.அப்போது. தான் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என்றும், அலியாளைமங்கலம் கிராமம், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த, சின்னத்தம்பி மகன் ஜெய் ஸ்ரீராமன் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக நெருங்கிப்பழகி, பின்னர் திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாக கூறினார். இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருமணம் செய்வதாக ஏமாற்றம். பெண் தீக்குளிக்க முயற்சி
எழுதியவர்: mohan September 24, 2019, 1:46 pm




You must be logged in to post a comment.