17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை பகுதியில் வைகை பெரியாறு பிரதான கால்வாயில் தண்ணீர் திறப்பு எதிரொலி. விவசாயப் பணிகள் துவக்கம்..

நிலக்கோட்டை பகுதியில் வைகை பெரியாறு பிரதான கால்வாயில் தண்ணீர் திறப்பு எதிரொலி. விவசாயப் பணிகள் துவக்கம்..

எழுதியவர்: mohan September 24, 2019, 1:25 pm

தேனி மாவட்டம் வைகை அணையின் ஒரு பகுதியில் பெரியார் பிரதான சிமெண்ட் கால்வாய் கட்டப்பட்டது..இந்த பெரியார் பிரதான கால்வாயில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி தண்ணீர் திறக்கப்பட்டது.  திண்டுக்கல் ,தேனி ,மதுரை, விருதுநகர் ,மேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள  விவசாயிகள் தற்போது  நிலங்களை உழுது நெல் நடவு செய்வதற்கான ஆயத்த பணியில் ஈடுபட்டுள்ளார்கள்..இந்த தண்ணீர் திறப்பு எதிரொலியாக நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ரெங்கப்ப நாயக்கன் பட்டி, குன்னுவரான்கோட்டை , க செக்காபட்டி, அணைப்பட்டி, சித்தர்கள் நத்தம்,, விளாம்பட்டி ,மட்டபாறை, இராமராஜபுரம் உள்ளிட்ட விவசாயிகள் இப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.மேலும் அவ்வபோது இப்பகுதியில் மழை பெய்து வருவதால் நிலக்கோட்டை சுற்றி உள்ள கிராமப்புற பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் சோளம், கம்பு, எள், துவரை மற்றும் சிலர் வெங்காயம் போன்ற பயிர்களை சாகுபடி செய்து உள்ளார்கள்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!