18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – மழைக்கு சாய்ந்த மரம்.போக்குவரத்து பாதிப்பு

மதுரை – மழைக்கு சாய்ந்த மரம்.போக்குவரத்து பாதிப்பு

எழுதியவர்: mohan September 24, 2019, 12:57 pm

மதுரையில்  பெய்த மழையில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் கீழே விழுந்தது. மதுரை விமான நிலையம் சாலையில் பெருங்குடியில் சுமார் 10க்கும் மேற்பட்ட மரங்களும் ஐந்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்களும் விழுந்து சேதமடைந்தது. இதனை மதுரை தீயணைப்புத்துறையினர் அகற்றினர். இந்நிலையில் மதுரை பைபாஸ் சாலை இருந்து பொன்மேனி வழியாக மாடக்குளம் செல்லும் சாலையில் சுரேந்தர் நகர் என்ற இடத்தில் மிகப் பெரிய வேப்பமரம் ஒன்று சாலையில் விழுந்தது. இதனால் பொன் மேனியிலிருந்து மாடக்குளம் மற்றும் பைபாஸ் சாலைகளில் போக்குவரத்து தடைபட்டது. உடனடியாக  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைவாக வந்து தீயணைப்புத்துறையினர் மின்மோட்டார் பொருத்திய மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் மரத்தை வெட்டி அகற்றினர்.

 செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!