17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே கொங்கபட்டியில் சாக்கடை நீர் தேங்கியுள்ளதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு.

உசிலம்பட்டி அருகே கொங்கபட்டியில் சாக்கடை நீர் தேங்கியுள்ளதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு.

எழுதியவர்: mohan September 24, 2019, 12:28 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் அருகே உள்ளது கொங்கபட்டி கிராமம். இந்த கிராமத்தில் ஆதிதிராவிடர் காலணி பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் உசிலம்பட்டி நகர பகுதிகளில் உள்ள சாக்கடை கழிவுநீர் அனைத்தும் இந்த காலணி பகுதியின் முன்பு தேங்கி வருகிறது. காலணி மக்களுக்கு குடிநீருக்காக அமைக்கப்பட்ட போர்வெல் அந்த பகுதியில் உள்ளதால் குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார். மேலும் சாக்கடை நீர் தேங்கி கிடப்பதால் அதிலிருந்து டெங்கு கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி வருவதாகவும், இரவு நேரமட்டுமல்லாமல் பகலிலும் கொசுக்கள் கடிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கியுள்ள சாக்கடை நீரை அகற்றி தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!