இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் சிக்ரி (சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ) – உலோக அரிமான சோதனை நிலைய மூத்த முதன்மை விஞ்ஞானி பேராசிரியர் ஜி. சுப்ரமணியன். இவர் சென்னை பல்கலை., யில் எம்.எஸ்சி (வேதியியல்), அண்ணாமலை பல்கலை., யில் ஆசிரியர் கல்வி, மதுரை காமராஜ் பல்கலை., யில் முனைவர் பட்டம் பெற்றார். ராமேஸ்வரத்தில் ஆசிரியராக தனது பணியை தொடங்கிய இவர், மண்டபம் உலோக அரிமான சோதனை நிலையத்தில் விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். 36 ஆண்டுகள் 2 மாதம் பணியாற்றிய இவர் செப்.30,2019 ல் பணி ஓய்வு பெறுகிறார்.
உலோக அரிமான தடுப்பிற்கு பல்வேறு ஆராய்ச்சி கட்டுரையில் வெளியிட்டுள்ளார். கடல் நீரில் உள்ள ஒட்டுண்ணிகளின் அரிப்புகளில் இருந்து விசைப்படகுகளை பாதுகாக்க ரசாயன கலப்பு அதிகமில்லாத வர்ண பூச்சு முறையை மீனவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். உலோக அரிப்பு மற்றும் தடுப்பு முறைகளுக்கு இவரது சிறந்த கட்டுரைக்கு அன்னபூமா விருது, நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு இவரது சாதனையை பாராட்டி 2014ல் இந்திரா காந்தி சத்பவனா தங்கப்பதக்கம் உள்பட பல்வேறுகள் விருதுகள் பெற்று சிக்ரி நிறுவனத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இவரது ஆய்வுகளுக்கு வெளிநாடு மற்றும் இந்தியாவில் காப்புரிமை பெற்றுள்ளார். பல்வேறு விருதுகள், சாதனைகள் படைத்த முத்த முதன்மை விஞ்ஞானி ஜி.சுப்ரமணியனுக்கு , ராமேஸ்வரத்தில் பிரிவுபசார விழா நடைபெற்றது. தனது ஏற்புரையில் விஞ்ஞானி ஜி.சுப்ரமணியன், ஆசிரியராக நான் பணிபுரிந்த 2 ஆண்டுகளில் மாணவர்களை அடித்ததில்லை. சிக்ரியில் பணியாற்றிய காலங்களில், நான் பதவியில் இருக்கிறேன் என்ற அகந்தையில் எந்த ஒரு பணியாளரிடமும் பாரபட்சம் காட்டிய தில்லை. பதவியை பயன்படுத்தி யாரையும் துன்புறுத்தக்கூடாது. பிரச்னைகளை எதிர்கொண்டு எளிதாக்கி உள்ளேன். தன்னுடன் இணைந்தோரும் தானும் வளர வேண்டும் என்பது என் கொள்கை . யோகா செய்தால் எண்ணங்கள், செயல்கள் சிறப்பாக அமையும். எனது ஓய்வு காலத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ திட்டமிட்டுள்ளேன்.. எனது வளர்ச்சியில் உறுதுணை நின்ற அனைவரையும் என் ஆயுள் உள்ள வரை மறக்க மாட்டேன் என்றார்.மண்டபம் முகாம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி கூட மண்டல மைய முதன்மை விஞ்ஞானி ஜெயக்குமார், விஞ்ஞானிகள் ஜான்சன், சக்திவேல், சிக்ரி முதன்மை விஞ்ஞானி பழனிச்சாமி, நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் மாரியப்பன், தூத்துக்குடி பொறியாளர் (ஓய்வு) கணபதி, பாஜக ., மாவட்ட தலைவர் முரளிதரன், டாக்டர் கங்கா, இராமேஸ்வரம் தீவு செய்தியாளர் மன்ற தலைவர் அ.அசோகன், செயலர் ஆர்.மோகன், உறுப்பினர்கள் மகேஸ்வரன், ரவி, பொன்.சத்யா, பாலாஜி, ராமநாதபுரம் செய்தியாளர் சங்க உறுப்பினர் கரு.கயிலைநாதன், பொறியாளர் ரி.நிஜாமுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்







You must be logged in to post a comment.