திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் அறம் வளர்த்தநாயகி கோயிலில் இருந்த நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், விநாயகர் ஆகிய ஐம்பொன்னால் ஆன சிலைகள், பல ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனது.இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்த நடராஜர் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை மீட்பு குழு மீட்டது.1982-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குக் கடத்தப்பட்ட நடராஜர் சிலை நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சிக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது. மீட்கப்பட்ட சிலைக்கு பக்தர்கள் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.