மதுரையில் இருந்து சரக்கு எற்றி வந்த வாகனம் இன்று 24.09.19 அதிகாலை ராமேஸ்வரம் வந்தது. அங்கிருந்து மதுரைக்கு இன்று கானை மீண்டும் புறப்பட்டுச் சென்றது. பாம்பன் சோதனைச் சாவடியை கடந்த போது மழை பெய்ததால் நிலை தடுமாறிய வாகனம் பாம்பன் பால தடுப்புச் சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. அந்த வாகனத்தில் சென்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக இராமேஸ்வரம் அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்திற்கான காரணம் குறித்து மதுரை மாவட்டம்.உசிலம்பட்டியைச் சேர்ந்த பேயாண்டி மகன் மாரியப்பனிடம் பாம்பன் போலீசார் விசாரிக்கின்றனர்.
பாம்பன் சாலை பாலத்தில் இருந்து உருண்ட வேன்
எழுதியவர்: mohan September 24, 2019, 11:13 am




You must be logged in to post a comment.