17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – அனுமதியின்றி மணல் திருடியவா்கள் கைது.

மதுரை – அனுமதியின்றி மணல் திருடியவா்கள் கைது.

எழுதியவர்: mohan September 24, 2019, 11:02 am

திருமங்கலம் நகர போலீசார் ரோந்து சென்றபோது சோழவந்தான் ரோட்டில் சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்தபோது அனுமதியின்றி மணல் திருடி வந்தது தெரியவந்தது. அதன்பேரில் ஓட்டுநர் ரமேஷ்(45) என்பவரை கைது செய்து , 3 யூனிட் மணலுடன் டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் சிலைமான் போலீசார் ரோந்து சென்றபோது சக்குடி சிவன் கோயில் அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த 2 டிப்பர் லாரிகளை சோதனை செய்த போது, அனுமதியின்றி மணல் திருடி வந்தது, தெரிந்ததை அடுத்து 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். தப்பியோடியவரகளை நபர்களை தேடி வருகின்றனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!