17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விஸ்வகர்ம சமுதாய கூட்டுக்குழு அமைப்பு சங்கங்கள் சார்பில் முப்பெரும் விழா

விஸ்வகர்ம சமுதாய கூட்டுக்குழு அமைப்பு சங்கங்கள் சார்பில் முப்பெரும் விழா

எழுதியவர்: mohan September 24, 2019, 10:49 am

மதுரையில் தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன சங்கம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள விஸ்வகர்ம சமுதாய கூட்டுக்குழு அமைப்பு சங்கங்கள் சார்பில் பழம்பெரும் நடிகர் எம்.கே. தியாகராஜ பாகவதர் அவர்களுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதற்கு சட்டசபையில் அறிவிப்பு செய்த அமைச்சர்களுக்கு பாராட்டு விழா, மற்றும் நலிந்த சமுதாய மக்களுக்கு நல உதவி வழங்கும் விழா, மாநில துணைத் தலைவர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி ரவீந்திரநாத் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விஸ்வகர்ம ஜகத்குரு ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் அவர்கள் பாராட்டிப் பேசினார். இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் பிரம்மஸ்ரீ தாமரை முருகன் முன்னாள் மாநிலத் தலைவர் பொன் ராஜ்,பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன், மாநில பொருளாளர் ஆறுமுகம், இணை பொதுச்செயலாளர்கள் பேச்சியப்பன், சங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!