17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாணவ,மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

மாணவ,மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

எழுதியவர்: mohan September 24, 2019, 10:43 am

மதுரை ஆரப்பாளையத்தில் குலாலர் கல்வி மேம்பாட்டு கழகம், மாநில அமைப்பு சார்பில், 37 ஆம் ஆண்டு மாணவ,மாணவியருக்கு பரிசளிப்பு விழா, மற்றும் ஏழை மாணவ,மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் பொன்ராஜ், உண்ணாமலை பொறியியல் கல்லூரி நிறுவனர் கார்த்திகேயன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் டீன் ஹரிதாஸ், எஸ்.வி.என் கல்லூரி பேராசிரியர் நாகராணி, சிவகங்கை பி.டி.ஓ காமராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் ஜெயப்ரகாஷ் நாராயணன், மாநில பொதுச்செயலாளர் தங்கராசு, மாநில பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!