18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அருகே தோல் கழிவுகளால் எரியூட்டி தயாரிக்கப்படும் பால்கோவா- தடை செய்ய கோரிக்கை

காட்பாடி அருகே தோல் கழிவுகளால் எரியூட்டி தயாரிக்கப்படும் பால்கோவா- தடை செய்ய கோரிக்கை

எழுதியவர்: mohan September 24, 2019, 10:37 am

வேலூரில் கள்ளத்தனமாக செயல்பட்டுவரும் ரசாயன தோல் கழிவுகளை கொண்டு பால்கோவா நிறுவனத்தை தடை செய்யக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வடுகன்தாங்கல் மேல் விலச்சூர் கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனமான பால்கோவா தயாரிக்கும் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பால்கோவா நிறுவனத்தில் எரியூட்டப்படும் கரும்பு கையினால் மூச்சு திணறல் துர்நாற்றம் மற்றும் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் ரவியிடம்  தெரிவித்துள்ளனர். மீண்டும் மீண்டும் ரசாயன தோல் கழிவுகளை கொண்டு இந்த பால்கோவா நிறுவனம் செயல்பட்டு வருவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். இந்த புகாரின் இந்த நிறுவனத்தால் எங்கள் வீடுகளுக்குள் கரும்புகை இருந்து எங்கள் வீடுகளுக்குள் தூசுகள் அதிகமாக வருவதாகவும் இதனால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு காலரா போன்ற உபாதைகள் ஏற்படுவதாக கூறி உடனடியாக அந்த நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!