18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டம் மக்கள் பாதை சார்பாக அக்டோபர்-2 கிராம சபை கூட்டத்தை முறையாக நடத்த ஆட்சியரிடம் கோரிக்கை..

இராமநாதபுரம் மாவட்டம் மக்கள் பாதை சார்பாக அக்டோபர்-2 கிராம சபை கூட்டத்தை முறையாக நடத்த ஆட்சியரிடம் கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் September 23, 2019, 8:56 pm

இராமநாதபுரம் மாவட்டம் மக்கள் பாதை சார்பாக அக்டோபர்-2 கிராம சபை கூட்டத்தை முறையாக நடைபெறுவதை உறுதிபடுத்த இன்று 23/09/2019 மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .

கோரிக்கை மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தற்போது கிராம சபை சார்ந்த விழிப்புணர்வு அரசு சார்பாக வழங்கப்படுகிறது எனவும் உங்களைப் போன்ற இளைஞர்கள் தங்களது பகுதியில் கலந்து கொண்டு முறையாக கண்காணிக்க வேண்டுமெனவும் கூறினார். மேலும் அக்டோபர்-2 கிராம சபையில் கலந்து கொண்டு அதன் தீர்மானங்கள் மற்றும் புகைப்படங்களை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர்கள் சரவணக்குமார் , நூருல் அமீன் , திருப்புல்லானி ஒன்றிய பொறுப்பாளர் கிளாட்வின், இராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர் தினேஷ், கடலாடி ஒன்றிய பொறுப்பாளர் நளினிகாந்த், நீரின்றி அமையாது உலகு திட்ட பொறுப்பாளர் வீரக்குமார், கொடை திட்ட பொறுப்பாளர் பாலாஜி, மானுடம் திட்ட பொறுப்பாளர் சசிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் கொடுத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!