சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறு செய்தி பரப்பியவர்களை கைது செய்ய வலியுறுத்தி உசிலம்பட்டியில் பா.ஜ கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பிரதமர் மோடி பிறந்த நாள் கொண்டாடுவது குறித்து விமர்சித்து சமூக வலைத்தளங்களில் சிலர் மோடி உருவபொம்மையை எரித்து வீடியோ வெளியிட்டு இருந்தனர்.இது சமூக வலைத்தளங்களில் வைரலானது.இவர்களை கைது செய்ய வலியுறுத்தி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு பா.ஜ கட்சியினர் மாவட்டச் செயலாளர் தங்கராஜ் ஒன்றியத்தலைவா் தீபன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திடீர் சாலை மறியலில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சம்பவமறிந்த போலிசார் அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து மறியலைக் கைவிட்டனர்.
சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறு செய்தி பரப்பியவர்களை கைது செய்ய வலியுறுத்தி உசிலம்பட்டியில் பா.ஜ கட்சியினர் திடீர் சாலை மறியல்.
எழுதியவர்: mohan September 23, 2019, 8:19 pm




You must be logged in to post a comment.