17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

எழுதியவர்: mohan September 23, 2019, 7:05 pm

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் நடத்திய போஷன் அபியான் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி துவக்கிவைத்து ஸ்டால்களை பார்வையிட்டார்.தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் திருவண்ணாமலை லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் வழிநடத்தினர்களுக்கான போஷன் அபியான் ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழா திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.பின்னர் மண்டபத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்திருந்த ஊட்டச்சத்து சம்பந்தமான ஸ்டால்களை பார்வையிட்டார்.இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டு ஊட்டச்சத்து மிக்க உணவினை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு பெற்றனர்.NULM சமுதாய அமைப்பாளர்கள் செல்வராணி, இந்திரா மற்றும் உமா ஆகியோர் இந்த நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து இருந்தனர்.நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் உதவி திட்ட அலுவலர் ஜான்சன் அவர்கள் செய்திருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!